ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘கூட்டத்தில் ஒருத்தன்’ மிடி பெஞ்செர்ஸ் பற்றிய கதையாக, மெசஜ் சொல்லும் படமாகவும், அதே சமயம் கமர்ஷியலான படமாகவும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இப்படத்தை பார்க்கும் பள்ளி ஆசிரியர்கள், இப்படம் பள்ளி மாணவ, மாணவிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் என்று கருதுவதோடு, தங்களது பள்ளி மாணவர்களுக்கு இப்படத்தை பார்க்க சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து தரும்படி இயக்குநர் த.செ.கனாவேளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஞான்வேல், சாவித்திரி அம்மாள் கீழ்த்திசை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை பார்க்க சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த சிறப்பு காட்சி, சென்னை சத்யம் திரையரங்கில் உள்ள சாந்தம் ஸ்க்ரீனில் நாளை (ஆகஸ்ட் 4) காலை செய்யப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...