Latest News :

சினிமா விநியோகத்தில் இறங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!
Sunday November-19 2017

சினிமா தயாரிப்பிலும், அதன் விளம்பர யுக்திகளிலும் எல்லோரையும் திரும்பி பார்க்க செய்து கொண்டிருக்கும் '24 AM ஸ்டுடியோஸ்' நிறுவனம் தற்பொழுது சினிமா விநியோகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

 

இதற்காக, 24 PM என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, “சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகுமுறையை கொண்டு சினிமா வினியோகத்தில் கால் பாதிக்கவுள்ளோம். 'Axess Film Factory' நிறுவனத்தின் அருள்நிதி நடிக்கும் ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிக்கும் ’ராட்சஸன்’ ஆகிய படங்களோடு எங்கள் விநியோகம் பயணத்தை தொடங்கவுள்ளோம். 

 

டில்லி பாபுவோடு இணைந்து எங்கள் விநியோகத்தை ஆரம்பிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. சமீபத்தில்  'மரகத நாணயம்' என்ற வசூலை குவித்த படத்தை தயாரித்த அவருக்கு இது போல மேலும் நிறைய தரமான  படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் உள்ளது. விநியோகத்துறையிலும் நாங்கள் கடுமையாக உழைத்து சாதிக்க  முனைப்போடு உள்ளோம்.” என்று தெரிவித்தர்.

Related News

1302

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery