மோட்டார் சைக்கிள் ரெஸிங்கில் இந்தியா அளவில் புகழ் பெற்று வருபவர், சென்னையை சேர்ந்த ரஜினி கிருஷ்ணன். இந்திய அளவில் இவரது சாதனைகள் பேசப்பட்டு வரும் நிலையில் இஅவருக்கு திரைப்பட த்யாரிப்பாளர் ஒருவர் உதவி செய்திருப்பது வைரலாக பரவி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நிமிர்'. இப்படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் டி.குருவில்லா. இவர் தான் ரஜினி கிருஷ்ணனுக்கு நிதி உதவி அளித்துள்ளார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரேசர் ரஜினி கிருஷ்ணாவிற்கு, அவர் ரேஸில் பங்கேற்க தேவையான முழு ஸ்பான்சர் தொகையை தந்து ஊக்குவித்துள்ளார்.
சந்தோஷ் டி.குருவில்லா அவர்களின் இந்த செயல் பலதரப்பிலிருந்தும் பாராட்டை பெற்று வருகிறது. கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் நம் நாட்டில், ரஜினி கிருஷ்ணன் போன்ற மிக பெரிய திறமைசாலிகளை ஊக்குவித்து உதவி செய்திருப்பது மற்ற விளையாட்டுகளையும் விளையாட்டு வீரர்களையும் முன்னேற்றுவதில் இந்த விஷயம் ஒரு முக்கிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...