உதயா கிரியேஷன் என்ற பட நிறுவனம் சார்பில் மனோ உதயகுமார் தயாரிக்கும் படம் ‘மேல் நாட்டு மருமகன்’.
இந்த படத்தில் ராஜ்கமல் நாயகனாக நடிக்கிறார். பிரான்ஸில் இருந்து ஆண்ட்ரீயன் என்னும் வெள்ளைக்கார பெண் நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோகராஜ், சாத்தையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கே.கெளதம் கிருஷ்ணா, இசை - வே.கிஷோர் குமார், படத்தொகுப்பு - விஜய் கீர்த்தி ( இவர் பிரபல எடிட்டர் ராஜ்கீர்த்தியின் மகன் ஆவார்) கலை - ராம், நடனம் - சங்கர், பாடல்கள் - நா.முத்துக்குமார், நாஞ்சில் ராஜன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ். தயாரிப்பு நிர்வாகம் - ஆனந்த், தயாரிப்பு - மனோ உதயகுமார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.எஸ்.எஸ்
படத்தின் இயக்குனர் எம்.எஸ் .எஸ் கூறும் போது, ”மேல் நாட்டு மருமகன் ஒரு கலாச்சாரப் பதிவு. நம் நாட்டு கலாச்சாரத்தின் மீது ஈர்க்கபட்ட ஒரு பிரெஞ்ச் நாட்டு பெண் நம் நாட்டு இளைஞனை காதலித்து கரம் பிடிப்பதே கதை.
படத்தை வெளிதிடுவதற்கு பல முறை முயன்றோம் பல தடைகள், சின்ன படங்களுக்கு ஏகப்பட்ட தடைகள் அந்த தடைகளைத் தாண்டி தான் வர வேண்டி இருக்கிறது. டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிட உள்ளோம். இங்கு மட்டுமல்ல பிரான்சிலும் 30 தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்ய உள்ளோம்” என்றார்
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...