Latest News :

தினேஷ் நடிக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’
Sunday November-19 2017

நம்ம  ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

 

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் தான் இந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான வெற்றி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணிவாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர் மறைந்து  17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

 

மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் தயாரித்து, இயக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர்.

 

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

 

அப்பாவை பின்பற்றி தயாரிப்பு, இயக்கம் என்று களமிறங்கும் காந்தி மணிவாசகம், கதை அமைப்பிலும், காமெடி, கமர்ஷியல் என்ற அவரது அப்பா பார்முலாவையே இவரும் கையிலெடுக்கிறார்.

Related News

1306

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery