இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், தனது அனைத்து படங்களின் மூலமும் பல சாதனைகளை செய்து வரும் நிலையில், தளபதி விஜய் தற்போது ரஜினிகாந்தையே புன்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை பிடித்துள்ளார்.
விஜயின் ‘மெர்சல்’ ரிலிஸுக்கு முன்பாகவும், ரிலிஸிக்கு பிறகும் பல்வேறு சாதனைகளை புரிந்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தி ரஜினியின் கபாலி படத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு, முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதுவரை வந்த தமிழ் படங்களில் யூடியூப்பில் பாடல் வரிகள் அடங்கிய வீடியோவில் கபாலியின் நெருப்புடா பாடல் தான் 30 மில்லியன் பார்வையாளர்களை கண்டு முதலிடத்தில் இருந்தது. இந்த நிலையில், தற்போது விஜய்யின் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் அடங்கிய வீடியோ 33 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு ரஜினியின் கபாலி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
யாருமே முறியடிக்க முடியாத ரஜினியின் இத்தகைய சாதனையை முறியடித்ததன் மூலம், விஜய் தனது மாஸை தமிழ் சினிமாவில் மட்டும் அல்ல இந்திய சினிமாவிலேயே காட்டி விட்டார், என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...