பிரபல சேனலில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியாங்கா பற்றிய சோகமான ரகசியமும், அவருக்கு நடிகர் மா.கா.பா.ஆனந்த் வாழ்க்கை கொடுத்த விஷயமும், தற்போது வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த பிரியங்கா, பள்ளிப் படிப்பினை பெங்களூரிலும், கல்லூரி படிப்பினை சென்னயிலும் முடித்தவர், ரேடியோ மிர்ச்சியில் சிறிது காலம் பணியாற்றியவர், காதலித்தவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அவரது திருமண வாழ்க்கை கசப்பில் முடிந்ததை தொடர்ந்து கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார்.
வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியால் மனம் உடைந்த பிரியங்கா, சென்னையில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பந்து எடுத்துப்போடும் வேலையினை செய்து வந்த நிலையில், மா.கா.பா.ஆனந்தை சந்தித்துள்ளார்.
பிரியங்காவின் துயரத்தை உணர்ந்த மா.கா.பா, அவருக்கு தொகுப்பாளினியாக பிரபல சேனலில் சிபாரிசு செய்து, அவருக்கு புது வாழ்க்கை கொடுத்துள்ளார். இதன் பிறகே பிரியங்காவின் வாழ்க்கை வண்ணமயமாகியுள்ளது.
தற்போது முன்னணி டிவி தொகுப்பாளினிகளில் ஒருவராக உள்ள பிரியங்கா, தனது நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவரை திருமணம் செய்துக் கொண்டார்.
மா.கா.பா.ஆனந்த் செய்த உதவி பிரியங்காவிற்கு மீண்டும் ஒரு சந்தோஷ வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...