ஊதிய விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெப்ஸி கடந்த 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. இதன் காரணமாக ரஜினிகாந்தின் ‘காலா’ உள்ளிட்ட சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. மேலும் 10 ஆயிரம் தொழிலாளர்களை வேலை இன்றி தவித்தனர்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணியை அழைத்து இந்த விவகாரம் குறித்து பேசியதோடு, வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டு பேச்சு வார்த்தை மூலம் சுமூகமாக முடிவு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக பெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று அறிவித்துள்ளார். அதன்படி நாளை முதல் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதால், படப்பிடிப்புகள் தொடங்குகிறது.
அதே சமயம், பெப்ஸி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கம், தாங்கள் முன்பு அறிவித்தது போல பெப்ஸி தொழிலாளர்களுடனும், பிற தொழிலாளர்களுடம் பணிபுரிவோம், என்று அறிவித்துள்ளது.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...