காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா பற்றி கடந்த ஓராண்டுகளாக செய்திகள் வெளியகிக் கொண்டிருக்கிறது. இதில்ம் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக்குக் கொண்டு அதற்கான ஆதாரங்களையும் காவல் நிலையங்களில் கொடுத்து வந்தனர்.
தற்போது இருவரும் பிரிந்து வாழும் நிலையில், தாடி பாலாஜியின் மனைவி நித்யா குறித்த பல ரகசியங்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால், எப்போதும் சோகமயமாகவே காணப்படும் நித்யா, சமீபத்தில் சென்னைய்ல் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு, “அவரா இஅவர்!” என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
பேஷன் ஷோவில் கலந்துக் கொண்டவர்களில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நித்யா, தனது மாற்றம் குறித்து பேசுகையில், “ரொம்ப நாளா கணவர் குழந்தை என்று சாதாரணக் குடும்ப பெண்ணாகவே வாழ்ந்துட்டேன்.
சமூக சேவையில் அதிக ஆர்வம் இருந்ததால என்.ஜி.ஓ ஆரம்பிக்கலாம்னு ஐடியா, அப்படி ஆரம்பித்தது தான் ‘வீ வுமன் எண்டோவர்’ (WE-Women Endeavor) அமைப்பு. இது முற்றிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு சாரா அமைப்பு.
அதுமட்டும் இன்றி, ‘தி பீ ஸ்கூல்’ (The Bee School) எனும் குழந்தைகள் விளயாட்டு பாடசாலை, ‘கேட்ச் எண்டெர்டெய்னர்ஸ்’ (Catch Entertainers) எனும் நிகழ்ச்சி மேலாண்மை அமைப்பும் தொடங்கி இருக்கேன்.
சமூக ஆர்வலரான எனக்கு முற்றிலும் பக்கபலமாக இருப்பது என் தந்தை. சமீபத்தில் கசிந்த என் மண வாழ்வின் கசப்பான பக்கங்கள் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், என்னுள் இருக்கும் மறுபக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த வெய்-ஃபா அமைப்புக்கு நன்றி.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...