முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக உள்ள சசிகுமார், கம்பெனி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதோடு, அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், சசிகுமாரின் நிறுவனத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வந்த அவரது அத்தை மகன், அசோக்குமார், நேற்று மதியம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்பு செழியன் தான் காரணம், என்றும், அவர் தன்னை பல மாதங்களாக மிரட்டி வந்ததாகவும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று இரவு வளசரவாக்கம் காவல் நிலையத்துல் அன்பு செழியன் மீது புகார் அளித்த சசிகுமார், அவரை கைது செய்ய வலியுறுத்துனார். அவருடன் இயக்குனர்கள் அமீர், சேரன், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்கள் காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பைனான்சியர் அன்பு செழியன்மீது, தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த அன்பு செழியன் தற்போது தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...