சென்னை வளசரவாக்கத்தில், சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கோலிவிட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புச் செழியன் என்ற கந்துவட்டிக்காரர்தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இவருடைய மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவருடைய மரணத்திற்கு காரணமாக இருக்கும் அன்புச்செழியன் என்கிற கந்து வட்டிக்காரர் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை பைனான்சியர் அன்புச் செழியன் நடிகர் அஜித்தையும் மிரட்டியதாக இயக்குனர் சுசீந்திரன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அன்புச் செழியனால் மிரட்டப்பட்டதை அஜித் மறுக்கமாட்டார் என்று அவர் கூறியுள்ளது கோலிவ்விட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் கடவுள் படத்தில் முதலில் ஒப்பந்தமானது அஜித் தான். இந்த பட விவகாரம் தொடர்பாக அஜித்தை அன்பு மிரட்டியதாக அப்போது பரவலாக பேசப்பட்டு வந்ததோடு, இந்த சம்பவத்தின் போது அந்த இடத்தில் இயக்குனர் பாலாவும் உடன் இருந்ததாக கூறப்பட்டது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...