2 மூவி buffs என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், ’தில்லுக்கு துட்டு’ வெற்றி படத்தை இயக்கிய ராம் பாலா இயக்கத்தில், கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்து உருவாகும் ‘டாவு’ திரைப்படம் அறிவிப்பு வந்த போதே இளைஞர்களை கவர்ந்து விட்டது என சொல்லலாம்.
சந்தோஷ் தயாநிதி இசை அமைக்க, தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், கே எல் பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ரெமியன் கலை வண்ணத்தில், அஜய் சதீஷ் நடனம் அமைக்க, சுபீகா ஆடை வடிவமைக்க, பிரபுவின் சண்டை பயிற்சியில் முனிஷ் காந்த், லிவிங்ஸ்டன்,ஊர்வசி, மனோ பாலா, கல்யாணி நடராஜன், பாவா லக்ஷ்மணன் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ரெபா மோனிகா ஜான். இவர் மலையாளத்தில் நிவின் பாலி உடன் நடித்து அறிமுகமானவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
”இந்தக் கதைக்கு மிக அழகான கதாநாயகி தேவை. ரெபேக்கா மோனிகா ஜான் மிக மிக பொருத்தமாக இருப்பார்.தமிழ் ரசிகர்களுக்கு இவரை நிச்சயம் பிடிக்கும்” என்கிறார் இயக்குனர் ராம்பாலா.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...