தமிழ் மொழி மீதும், பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட செந்தில் குமரன், 2003ம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் இவர் மின்னல் மியூசிக் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலில் பல தமிழ் பாடலை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டு வருகிறார்.
இப்படி இவர் வெளியிட்டுள்ள பல பாடல்களை உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் பார்த்தும், பாராட்டியும் வருகின்றனர். குறிப்பாக பிரபல முன்னணி இசையமைப்பாளர்களும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், வாலியின் வரிகளில் இளையராஜாவின் இசையில் ‘நான் கடவுள்’ படத்தில் இடம் பெற்ற ‘ஓம் சிவோஹம்...’ என்ற பாடலை மறு உருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர். தனது இசை குழுவினருடன் பிரமாண்டமான அரங்கில், தனக்கே உரிய தனித்திறமையால் அந்த பாடலை அற்புதமாக பாடி பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...