Latest News :

அனைத்துவிதமான பாடல்கள்களையும் பாடுவேன் - நமீதா பாபு!
Wednesday November-22 2017

தமிழ் சினிமாவின் அடுத்த சிறந்த  பாடகியாக வேண்டும் என்ற கனவோடும், அதற்கான திறமையோடும் இருக்கும்  நமீதா பாபுவின் பிண்ணனி பாடகி வாழ்க்கைக்கு ஒரு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. 'சண்டி வீரன்’ படத்தில் 'அலுங்குறேன் குலுங்குறேன்'  பாடல் மூலம் ஹிட் கொடுத்து  தனது பயணத்தை தொடங்கியவர் நமீதா பாபு. 

 

இது குறித்து நமீதா பாபு பேசுகையில், “எனது  பாடகி வாழ்க்கைக்கு கிடைத்திருக்கும் துவக்கம் மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளது. 'சண்டிவீரன்' படத்தில் அழகான பாடலோடு  ஆரம்பித்த எனது பயணம் 'திருநாள்' படத்தில் வெற்றிகரமாக தொடர்ந்தது. பிறகு 'மகளிர் மட்டும்' படத்தில் ஜிப்ரான் அவர்கள் இரண்டு முத்தான பாடல்களை எனக்கு தந்து எனக்கு பல பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்று தந்தார்.

 

தற்பொழுது 'தீரன் அதிகாரம் ஒன்று’ படம்  தெலுங்கில் 'காக்கி' என்ற பெயரில் ரிலீஸாகியுள்ளது. அப்படத்திலும்  பாடியுள்ளேன். இந்த மாதிரியான அருமையான பாடல்களை தொடர்ந்து பாட விரும்புகிறேன். சிறந்த பின்னணி பாடகியாகவேண்டும் என நான் போட்டு கொண்டிருக்கும் உழைப்பு என்னை நிச்சயம் உயர்த்தும் என நம்புகிறேன். 

 

வெஸ்டர்ன் க்ளாசிக்கலில் முறையாக பயிற்சி பெற்று தேர்ந்துள்ளதால் எல்லா வகையான பாடல்களை என்னால் பாட முடியும். நிறைய இசையமைப்பாளர்களோடு இணைந்து பல அருமையான, ஹிட் பாடல்களை நான்  பாட ஆவலோடு உள்ளேன்” என்றார்.

 

'Nspire School Of Music' என்ற இசை  பள்ளியை சென்னையில்  நடித்திவருகிறார் நமீதா பாபு. இந்த இசை பள்ளியை இசையமைப்பாளர்கள் ஜிப்ரான், ஸ்ரீகாந்த் தேவா மற்றும் SN அருணகிரி ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்துள்ளனர். வரும் 24 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் 'வீரையன்' படத்தில் நமீதா பாபு மூன்று பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

1329

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி!
Wednesday July-09 2025

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...

’பல்டி’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர்!
Wednesday July-09 2025

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி  அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...

Recent Gallery