‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு ராணா நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘நான் ஆணையிட்டால்’. காஜல் அகர்வால், கேத்ரின் தெரஸா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ள இப்படத்தை தேஜா இயக்கியிருக்கிறார்.
ஏற்கான்வே ‘லீடர்’ என்ற அரசியல் படத்தில் நடித்திருக்கும் ராணாவுக்கு இது இரண்டாவது அரசியல் படமாகும். பொதுவாக அரசியல் திரைப்படங்கள் என்றாலே, சில விசயங்களை மறைமுகமாகவும், நகைச்சுவை பாணியிலும் தான் சொல்லுவது வழக்கம். ஆனால், ‘நான் ஆணையிட்டால்’ படத்தில் தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், நிகழ்வுகளையும் துணிச்சலாக சொல்லியிருக்கிறார்கள்.
நேர்மையான இளைஞன் ஒருவனை, அரசியல் எப்படி மாற்றுகிறது என்பது தான் ‘நான் ஆணையிட்டால்’ படத்தின் கதை. இப்படத்தின் மூலம் அரசியல் நிகழ்வுகளை மிக நுணுக்கமாக பதிவு செய்துள்ள தேஜா, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும் இப்படத்தை இயக்கியிருக்கிறாராம்.
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...
ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு...
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் முன்னாள் மக்கள் தொடர்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி...