கலிங்கா என்கின்ற படத்தை தயாரித்த வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் தற்போது தயாரிக்கும் படம் ‘பற’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கீரா. இவர் பச்சை என்கின்ற காத்து, மெர்லின் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்க, இவர்களுடன் பல முன்னனி நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
சமீபத்தில் தொடங்கிய இப்படத்துன் முதல் நாள் படப்பிடிப்பில் டைரக்டர் பா.ரஞ்சித் கலந்துக்கொண்டு ஆக்ஷன், கட் சொல்லி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
சிபின் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கிறார். உமா தேவி, சினேகன் ஆகியோர் பாடல்கள் எழுத, சாபு ஜோசப் எடிட்டிங் செய்கிறார். மகேஷ் கலையை நிர்மாணிக்க, சிவசங்கர் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். எஸ்.பி.முகில் இணை தயாரிப்பை மேற்கொள்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...