மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் என எல்லா தரப்பினரிடையும் பேராதரவு பெற்றுள்ள 'அறம்' படத்தின் எல்லா தொழில்நுட்ப அம்சங்களும் பாராட்டுக்களை பெற்று வருகின்றன. இப்படத்தில் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவை பாராட்டாதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம்.
'அறம்' குறித்து அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் பேசுகையில், “எனது சினிமா வாழ்க்கையில் சிறந்த படங்களில் ஒன்று 'அறம்'. இப்படத்தின் கதையை முதல் முறையாக கேட்ட பொழுதே, அழிந்து வரும் நமது பூமியின் அவல நிலையை சித்தரிக்க ' க்ரே ' கலரை பயன்படுத்தி, அதற்கான லைட்டிங்கை கொடுத்து, சில ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். இதற்கு ஏற்பதான் நயன்தாரா அவர்களின் ஆடையும் வடிவமைக்கப்பட்டது.
வறண்ட பூமி, கடும் வெயில் போன்ற அம்சங்களால் படப்பிடிப்பு சிரமமாக இருந்தது. ஆழ்குழாய் காட்சிகளில் பயத்தை கொண்டு வருவது அவசியம். அதற்காக சில பிரத்தியேக லென்ஸை பயன்படுத்தினேன். நயன்தாராவுடன் நான் இணைந்து பணிபுரிவது இது மூன்றாவது படம். 'ஆரம்பம்' , 'காஷ்மோரா' படங்களுக்கு பிறகு இப்படத்தில் நயன்தாராவுடன் பணியாற்றியுள்ளேன். அவர் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகையோடு பணிபுரிவது என்றுமே ஒரு அற்புதமான அனுபவம். அவரது ஈடுபாடை கண்டு அசந்துள்ளேன்.
இக்கதையின் மேல் இயக்குனர் கோபி நைனார் வைத்திருந்த நம்பிக்கையும் அவரது எழுத்தும் தான் இப்படத்தை இவ்வளவு சிறந்த படமாக்கியுள்ளது. வார்த்தைகளால் சொல்ல முடியாத திருப்தியையும் பெருமையையும் 'அறம்' எனக்கு கொடுத்துள்ளது.” என்றார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...