Latest News :

பாலிவுட் சினிமா பட்டறையில் பயின்றவர் ஹீரோயினாக நடிக்கும் ‘மல்லி’
Thursday November-23 2017

முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படம் ‘மல்லி’. இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர். இவர் 13 ம் பக்கம் பார்க்க , வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். நாயகியாக மஞ்சு தீக்‌ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில் கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு பயின்றவர். இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன், அல்லு அர்ஜூன், ரன்வீர்கபூர் போன்றவர்கள் பயின்றார்கள்.

 

இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ  நடிக்கிறார்.  மற்றும் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ்,  அம்சவேலு ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு - தாஸ். இவர் கனனடத்தில் 100 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். இசை - தினேஷ் - பஷீர், பாடல்கள் - புலவர் சிதம்பரனாதன் பாண்டிதுரை, எடிட்டிங்-  B.s.வாசு, கலை - வினோத், நடனம் -  சுரேஷ், ஸ்டண்ட் - ஸ்டண்ட் ஷிவு, தயாரிப்பு நிர்வாகம் - நடராஜன், கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கிறார் ரேணுகா ஜெகதீஷ். வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி நிலா.

 

படம் பற்றி இயக்குநர் வெங்கி நிலா கூறுகையில், “தன் காதலி மஞ்சு தீக்‌ஷித்துடன் உயிருக்கு பயந்து ஓடும் ரத்தன் மெளலி காட்டுக்குள் இருக்கும் ஒரு பாழந்தடைந்த பங்களாவுக்குள் அடைக்கலமாகிறான். அங்கே நடக்கும் திகில் சம்பவங்களே கதை. படப்பிடிப்பு முழுவதும் வேலூர் ஏலகிரி பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் நடைபெற்றிருக்கிறது.” என்றார்.

Related News

1338

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery