குஜராத்தை சேர்ந்த நமீதா கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தார். ‘மச்சான்ஸ்’ என்று ரசிகர்களை அழைத்து உற்சாகமூட்டுவார். சமீபகாலமாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு குறைந்தன.
இதையடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.
இந்த நிலையில் வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்யப்போவதாக சமீபத்தில் நமீதா அறிவித்தார். அவரை நன்றாக தெரிந்த பிறகே காதலிப்பதாகவும் கூறி இருந்தார். அதன்படி அவர்களது திருமணம் திருப்பதியில் இன்று காலை நடைபெற்றது.
திருப்பதி தாமரை கோவில் என்றழைக்கப்படும் இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் நமீதா-வீரேந்திர சவுத்ரியின் திருமணம் இன்று காலை நடந்தது.
நமீதாவின் திருமணத்தில் சரத்குமார், ராதிகா, காயத்ரி ரகுராம், ஆரத்தி, சக்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ள நமீதா, தனது அனருடன் சேர்ந்து தொழில் செய்ய இருக்கிறாராம்
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...