மெரீனாவில் இருந்த சிவாஜி சிலை அகற்றப்பட்டு, புதிதாக கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்று இரவு அவரது சிலை மெரினாவில் இருந்து அகற்றப்பட்டு தற்போது அடையாரில் கட்டப்படும் சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மணிமண்டபம் திறக்கப்பட்டு, இந்த சிலையையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, சிவாஜி சிலை அகற்றியது குறித்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருவதோடு, மெரீனா கடற்கரை ஓரம் சிவாஜிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். சிவாஜி கணேசனின் மகன்களான பிரபு மற்றும் ராம்குமாரும் இதையே வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், சிவாஜி சிலை அகற்றியது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள கமல்ஹாசன், “சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலைசெய்வோம் அதை எந்நாளும் காப்போம் அரசுக்கு அப்பால் என் அப்பா” என்று தெரிவித்துள்ளார்.
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மா வந்தே’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது...