அதர்வாவை வைத்து இயக்குநர் கண்ணன், தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்க உள்ள படம், படப்பிடிப்புக்கு முன்பாகவே திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வரும், ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்கும் மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மேகா ஆகாஷ், கூடிய விரைவில் தமிழ் சினிமாவிலும் ஜொலிக்கவிருக்கிறார்.
இது குறித்து கூறிய இயக்குநர் கண்ணன், “அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியை திரையில் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களும், இளைஞர்களும் புதுமையாக உணர்வார்கள். முன்னணி நடிகையாக வர அத்தனை தகுதிகளும் மேகா ஆகாஷுக்கு இருக்கிறது. மேகா ஆகாஷின் பிரபலத்தன்மை இளைஞர்களிடம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. அவரை எங்கள் படத்தில் நாயகியாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...