Latest News :

பரபரப்பை ஏற்படுத்திய விஷ்னு மஞ்சுவின் ’குறள் 388’ பஸ்ட் லுக்!
Saturday November-25 2017

விஷ்னு மஞ்சு நடிக்கும் ’குறள் 388’-ன் முதல் பார்வை நவம்பர் 23, புதன்கிழமை அன்று வெளியானது. படத்தின் கதாநாயகன் விஷ்ணு மஞ்சுவின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் முதல் பார்வை வெளியானது. ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படித்தின் முதல் பார்வையை விஷ்ணு மஞ்சு  ட்விட்டரில் வெளியிட்டார். 

 

பொலிட்டிக்கல் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் முதல் பார்வை சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், முதல் பார்வையில் பல தலைவர்களின்  படங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்பட பல தேசிய கட்சிகளின் தலைவர்கள் படம் இடம் பெற்றிருந்தது. சமூக வலைதளங்களை கலக்கிய குறள் 388 படத்தை அறிமுக இயக்குனர் GS கார்த்திக் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

 

தமிழில் இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்திருந்த சுரபி குறள் 388 - ன் கதாநாயகியாக நடிக்கிறார். தவிர பிரபல நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். 

 

தெலுங்கில் வோட்டர் என்ற தலைப்பில் வெளியாகும் குறள் 388, திரு வள்ளுவர் எழுதிய குறளில் 388 வது குறளின் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. 

 

தேர்தலின் போது போலியான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலுக்குப் பின் அதை மறந்து விடும் போலியான அரசியல் வாதிகளின் முகத்திரைகளை தோலுரிக்கும் கதையே குறள் 388 படத்தின் கதையாகும்.  

 

விஷ்னு மஞ்சுவிற்கு குறள் 388, தமிழில் நல்ல ஒரு அறிமுகபடமாக அமையும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். 

 

தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு ரமேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சுதீர்  குமார் புடோட்டா படத்தை தயாரிக்கிறார்.

Related News

1348

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery