பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜூலி கலக்கிவந்த நிலையில், தற்போது அந்நிகழ்ச்சியின் குயினாக உருவெடுத்திருப்பவர் நடிகை ஓவியா. இவருக்காக ரசிகர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளதால், ஓவியாவை வைத்தே பிக் பாஸ் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், திடீரென்று பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிந்து மாதவி, ரசிகர்கள் மத்தியில் இன்னும் வரவேற்பு பெறவில்லை என்றாலும், அவர் ஸ்பெஷல் கஸ்ட்டாகவே பார்க்கப்படுகிறார்.
பட வாய்ப்புகள் ஏதுமில்லாத பிந்து மாதவி, பிக் பாஸ் வாரம் ரூ.3 லட்சம் சம்பளம் வழங்குகிறார். அதே சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் குயினான ஓவியாவுக்கு வாரம் ரூ.2 முதல் 2.5 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறதாம்.
குறைவான சம்பளம் வாங்கும் ஓவியாவே இந்த அளவுக்கு நடிக்க, அவரைக் காட்டிலும் அதிகமாக சம்பளம் வாங்கும் பிந்து மாதவி, எப்படியெல்லாம் நடிக்கப் போகிறாரோ!, என்று பிக் பாஸ் ரசிகர்கள் இப்போதே சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்'...
’ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தை விஷாலே இயக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் ‘பிரமலு’ புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’...