சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு ஃபைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் என அவரே கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார். இதனால் அன்புக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் சசிகுமார் தரப்பு தீவிடம் காட்டி வரும் நிலயில், அன்பிடம் பணம் வாங்கியவர்கள் கூட்டம் போட்டு அன்புக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை பூர்ணா, அசோக்குமாரின் மரணத்திற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்ததோடு, அன்பு செழியனை அசிங்கமாக திட்டியும் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் கடைசியாகப் பணிபுரிந்த 'கொடி வீரன்' படத்தில் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடித்திருப்பவர் பூர்ணா. அசோக்குமார் தற்கொலை செய்த உடனேயே அவருடைய ட்விட்டரில், 'அசோக் சார், நீங்கள் சிறந்தவரிலும் சிறந்தவர். நீங்கள் நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எங்களை விட்டுப் போக முடியாது, நீங்கள் எங்களுடனேயே இருப்பீர்கள்.' என ட்வீட் செய்திருந்தார்.
அசோக் குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை விமர்சித்து மூன்று நாட்களுக்கு முன்பே இன்னொரு ட்வீட்டும் செய்திருந்தார் பூர்ணா. 'அன்புச்செழியன் போன்ற ... நமது சினிமாவில் இருக்கக் கூடாது,' என பூர்ணா ட்வீட் செய்திருந்தார்.
நேற்று திரும்பவும், 'அவர் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார். நாம் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய முடியும். ...அன்புச்செழியனுக்கு மிகப் பெரும் தண்டனையைக் கொடுக்க வேண்டும். இதற்காகவது நாம் ஒன்றாகக் கை கோர்ப்போம்,' என்று ட்வீட் செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவே அன்பு விஷயத்தில் அடக்கி வாசிக்கும் நிலையில், கேரளாவில் இருந்து வந்த நடிகை ஒருவர், அன்புச்செழியனை இப்படி அசிங்கப்படுத்தி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பதோடு, அவரை பலர் பாராட்டியும் வருகிறார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...