2M சினிமாஸ் கே.வி.சபரீஷ் தயாரிப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவிகுமார், ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில், சாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காவியன்’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் முழுவதும் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் படமாக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட், கோலிவுட் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் ‘காவியன்’ படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த நடிகர் சரத்குமார், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படத்தின் இசையும், அதை தொடர்ந்து படமும் வெளியாக உள்ளது.
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...
ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...
மு. மாறன் இயக்கத்தில், ஜெ.டி...