விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது போல மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது. பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்த மெர்சலால் தயாரிப்பு தரப்பு எந்தவித பாதிப்பும் இன்றி லாபம் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால், விஜய் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக அட்லீக்கு பேசப்பட்ட சம்பளத்தில் பாதியை தான் கொடுத்திருக்கிறதாம். இன்னும் ரூ.5.5 கோடி பாக்கி வைத்துள்ளதாம். அட்லீ பல முறை தயாரிப்பு தரப்பிடும் கேட்டும் சரியான பதில் அளிக்காமல், அவரை கதறவிடுகிறதாம்.
‘மெர்சல்’ படத்தின் ரிலிஸ் போது படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்க தயாரிப்பு தரப்பு பெரும் சிரமப்பட்டதாம். அதற்கு காரணம் இயக்குநர் தான் என்ற கடுப்பில் அவருக்கு சம்பள பாக்கி கொடுக்காமல் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...