வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றியை பகிர்ந்துக் கொள்ளும் விதத்தில் படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இயக்குநர் வினோத், கார்த்தி, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, “நாங்கள் திருட்டு விசிடியில் பார்க்காதீர்கள் என்று சொன்னால் நீங்களும் கேட்பது இல்லை, ஆனால், ஒரு நல்ல படத்தை அதில் பார்க்கும் போது குற்ற உணர்ச்சி வரவேண்டும்.
அப்படி வந்தால் எங்களுக்கு நீங்கள் ஏதும் தரவேண்டும், ரூ 100 அருகில் கஷ்டப்படுபவர்களுக்கு தந்துவிடுங்கள்” என்று தெரிவித்தார்.
கார்த்தியின் இந்த பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பும் பெற்றுள்ளது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...