தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமான பைனான்சியர் அன்புசெழியனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் தயாரிப்பாளர் சங்கம் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம், அன்புசெழியனுக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் பலர் ஆதரவாக பேசி வருவதால், சினிமா இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கின்றன.
இந்த நிலையில், விஷால் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைபள்ளியில் நடைபெறுகிறது.
அங்கு உள்ளூர் கேபிள் டி.வி உரிமையாளர்களைச் சந்தித்த விஷால் தயாரிப்பாளர், அனுமதி பெறாமல் திரைப்படப் பாடல்கள், திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது. அதற்கு தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தினால் சட்டப்படி வெளியிட முடியும். இவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஷால். அசோக்குமாரின் தற்கொலை விவகாரம் பற்றிக் கேட்டதற்கு, தயாரிப்பாளர் "அசோக்குமார் மரணத்திற்கு நியாயம் தேவை. சினிமாத்துறையில் அன்புச் செழியனுக்கு ஆதரவாக வரும் குரல்கள் அவர்களின் சொந்த கருத்து. ஏன் நான்கூட அன்புசெழியனுடன் வியாபார ரீதியான தொடர்பு உடையவன்தான். ஆனால் மரணம் நடைபெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் எழுதிய கடிதத்தில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. மரணத்திற்கு நியாயம் தேவை. அதற்காகக் காவல்துறையை நம்புகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...