ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’.
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம் - செந்தில், ஒளிப்பதிவு - இனியன் ஹரீஷ், இசை - அம்ரீஷ், பாடல்கள் - விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத், ஸ்டன்ட் - சூப்பர் சுப்பராயன், எடிட்டிங் - எலீசா, கலை - நித்யானந், நடனம் - ராபர்ட்.
தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சங்கர், கதை, திரைக்கதை அமைத்து வடிவுடையான் இயக்குகிறார்.
ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது வரம் மாதிரி. எல்லா படங்களும் விற்பனையாகி விடுவதில்லை. ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கும் பொட்டு படம் பரபரப்பாக விற்பனையாகி விட்டது.
மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட பேய்கள் செய்யும் சாகசங்கள் மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது. அதனால் பொட்டு படம் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் NkR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். தெலுங்கில் சென்சார் ஆன உடனே எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப் படும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...