நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அவ்விடத்திற்கு வந்த கேரவானில் உள்ள ஏசி-க்காக மின்சாரம் திருடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள தனது குலதெய்வ கோவிலுக்கு தனது மனைவி ஐஸ்வர்யா, அம்மா, அப்பா உள்ளிட்ட குடும்பத்தாருடன் நடிகர் தனுஷ் நேற்று முன் தினம் வந்திருந்தார். அப்போது போடியில் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கிய தனுஷ், நேற்று (விழாயக்கிழமை) ஆண்டிபட்டி, முத்துரெங்காபுரத்தில் உள்ள தனது குல தெய்வமான கஸ்தூரி அங்கம்மாள் கோவிலுக்கு சென்றார். தனது குடும்பத்தாருடன் தனுஷ் காரில் கோவிலுக்கு வருவதற்கு முன்பாகவே, அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அங்கே கேரவன் ஒன்று வந்திருந்தது.
அந்த கேரவனில் இருக்கும் ஏசி-க்காக அருகே இருந்த மின் கம்பத்தில் இருந்து முறைகேடான முறையில் மின்சாரம் திருடப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் கண்டித்தும் கேரவன் நிர்வாகிகள் கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து மக்கள் மின்சார வாரியத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த மின் ஊழியர்கள் ஆய்வு மேற்கொண்டு, மின்சாரம் திருடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக கேரவனை கைப்பற்றி அங்கிருந்து மின்வாரிய ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். பிறகு முறைகேடாக கேரவன் வாகனத்திற்கு மின்சாரம் எடுத்ததாகக் கூறி, ரூ.15,731 அபராதம் வசூலித்த பிறகு கேரவன் ஒப்படைக்கப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...