ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் "திருட்டுப்பயலே 2".
இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...