‘காக்கா முட்டை’ என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குநர் மணிகண்டன், தான் தொடர்ந்து இயக்கிய படங்களால் திறமையான இயக்குநர் என்று நிரூபித்து வந்தார்.
இந்த நிலயில், தற்போது தனது அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் மணிகண்டன் கஷ்ட்டப்பட்டு வருவதாகவும், இதற்கு காரணமே, சமீத்தில் தற்கொலை செய்துக் கொண்ட தயாரிப்பாளர் அசீக்குமார் மரணத்திற்கு காரணமானவர் என்று கூறப்படும் பைனான்சியர் அன்பு செழியன் தான் என்று கூறப்படுகிறது.
ஆண்டவன் கட்டளை படத்தை ஃபர்ஸ்ட் காப்பி முறையில் ரூ.5.5 கோடிக்கு செய்து கொடுப்பதாக அன்புச்செழியனுடன் மணிகண்டன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
தனியாக சம்பளம் ஏதும் பேசாமல் லாபத்தில் 40% ஷேர் என்று மணிகண்டனுடன் அன்புச்செழியன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நன்றாக சென்ற நிலையில் தன் 40% பங்கை இயக்குனர் கேட்டிருக்கிறார், ஆனால் படம் ஓடவில்லை என கூறிவிட்டாராம் அன்புச்செழியன்.
பின்னர் படத்தின் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை விற்று அதிக பணம் ஈட்டியுள்ளார் அன்புச்செழியன். இருப்பினும் தற்போதுவரை மணிகண்டனுக்கு தர வேண்டிய காசை கொடுக்கவில்லையாம், முறையான கணக்கும் காட்டவில்லையாம்.
இதனால் தற்போது பணகஷ்டத்தில் இருக்கும் மணிகண்டன் ஸ்க்ரிப்ட் எழுதுவது போன்ற சின்னசின்ன வேலைகளை செய்து வருகிறார். அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் இல்லாததால், தான் வாங்கிய சில சினிமா உபகரணங்களையும் விற்றுவிட்டாராம்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...