தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சினிமா பைனான்சியர் அன்பு செழியன், முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சினிமா பிரமுகர்களுடன் நான் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்பில் இருக்கிறேன். சசிகுமார் நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு நான் நிதி உதவி செய்தேன். அந்த படம் நஷ்ட்டம் அடைந்து விட்டது. பிறகு அப்படத்திற்காக கொடுத்த பணத்தை வட்டியுடன் திரும்ப கேட்டேன். ஆனார், சசிகுமார் தரப்பினர் ‘கொடிவீரன்’ படத்தின் மூலம் அந்த கடனை அடைப்பதாக சொன்னார்கள். கொடுத்த கடனைபடம் ரிலீஸின் போது வட்டியுடன் கேட்பது சினிமாவில் வழக்கமான ஒன்றுதான். அதை தான் நான் செய்தேன்.
ஆனான், அசோக்குமார் தற்கொலையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி என்னை குற்றவாளியாக்கியுள்ளார்கள். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்ற உத்ரவாதத்தையும் தருகிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...