முன்னணி தமிழ் சேனல்களில் ஒன்றான விஜய் டிவி-யில் முன்னணி வி.ஜே-வாக இருந்த ஜாக்குலின், தற்போது அந்த சேனலில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு காரணம், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக்குலினோடு இணைந்து தொகுத்து வழங்கிய ஜகன், அவரை இரட்டை அர்த்தத்தில் பேசி கலாய்த்தாராம். மேலும், நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் ஜான் விஜய், ஜாக்குலினை தொட்டு டான்ஸ் ஆட, மேடையிலேயே ஜாக்குலின் தன்னை தொடாமால் ஆடுமாறு ஜாக்குலின் ஜான் விஜயை எச்சரித்தார். இதனால் கடுப்பான ஜான் விஜய் ஜாக்குலின் குறித்து டிவி நிர்வாகத்திடம் முறயிட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படி தொடரந்து ஜாக்குலினுக்கி பாலியல் ரீதியாக சிலர் தொள்ளைக் கொடுத்து வந்ததாலேயே அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமய, அவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், அதனால் தான் அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது.
எது உண்மை, என்று ஜாக்குலின் வாய் திறந்தால் தான் தெரியும்.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...