ஊதிய உயர்வை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர்ந்து 3 வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு சென்னை உயர் நீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலயில், பிக் பாஸ் ஜூலி செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துக் கொள்ள இன்று வந்தார். அப்போது போலீசார் அவரை தடுத்தனர். அதற்கு, “நானும் செவிலியர் தான், போராட்டத்தில் கலந்துக் கொள்ள அனுமதியுங்கள்” என்று கூறி போலீசாருடன் ஜூலி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று, அதன் மூலம் கிடைத்த மக்கள் ஆதரவை வைத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, பிக் பாஸ் மூலம் மக்களிடம் தக்கு கிடைத்த வரவேற்பால், தற்போது படு ஜோராக லட்சம் லட்சமாக பணம் சம்பாதித்து வருகிறார்.
இருந்தாலும், அவரை மக்கள் வில்லியாகவும், ஏமாத்துக்காரராகவும் தான் பார்க்கிறார்கள். மக்களிடம் தனக்கு ஏற்பட்ட இந்த அவப்பெயரை மாற்றவே, ஜூலி செவிலியர்கள் போராட்டத்தில் பங்கேற்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...