சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் தோல்வியை சந்தித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன், வீடு உள்ளிட்ட சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்.
இது குறித்து நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த மைக்கேல் ராயப்பன், சிம்பு தனக்கு கொடுத்த இன்னல்கள் குறித்து கண்ணிரோடு அளித்த பேட்டி இதோ:
அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. பின்னர், முறையாக படப்பிடிப்புக்கு வரவில்லை. சரியான முறையில் தேதிகள் வழங்கவில்லை. படத்தின் கதைப்படி படத்தையும் எடுக்க விடவில்லை. பாதி படம் நடித்தபோது இரண்டு பாகமாக படத்தை தயாரியுங்கள். எது வந்தாலும் நான் பொறுப்பு என்றதுடன், 2ம் பாகத்தை சம்பளம் வாங்காமல் நடித்து தருகிறேன் என்றார்.
சிம்புவுக்கு கேட்ட சம்பளம் தரப்பட்டது. ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடு தரச் சொல்லி கேட்கிறார்கள். அவர்களுக்கு நஷ்ட ஈடு தர சிம்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும். சிம்புவால், வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்.
இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தில் அளித்த புகாரில் கூறி உள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை. சிம்புவிடம் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும்.
இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...