தமிழ்த் திரைப்படங்களைத் திருட்டுத் தனமாக இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திற்கு வரும் விளம்பரங்களைத் தயாரிப்பாளர் சங்கம் முடக்கியுள்ளது. இதனால் அந்த இணையதளம் அதன் ரசிகர்களிடம் நன்கொடை கேட்டு வருகிறது.
தமிழ் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பைரசி எனப்படும், படங்களின் திருட்டு பிரிண்ட். முன்பெல்லாம் திருட்டு வீசிடிகளில் வந்தப் படங்கள், இப்போது உடனுக்குடன் இணையத்தளங்களில் யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்யும் வகையில் மாறியுள்ளது.
அதிலும் குறிப்பாக, தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் படம் வெளியான நாளே அதனை இணையதளத்தில் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது.
இதனையடுத்து, ஒரு இணையதளத்தின் வருவாய்க்கான முக்கிய வழியாக இருக்கும் விளம்பரங்களை தயாரிப்பாளர் சங்கம் முடக்கியுள்ளது. இதன் மூலம் விளம்பரங்களின் மூலம் பெற்று வந்த வருமானத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இழந்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து இயங்க வருமானம் இல்லாததால் தமிழ் ராக்கர்ஸ் தற்போது அதன் பாலோவர்ஸிடம் தங்களுக்கு நன்கொடை அளிக்குமாறு கேட்டுள்ளது. அதற்கு பலர் புதுப்படங்களை ஓசியில் பார்க்கத்தான் தமிழ்ராக்கர்ஸிக்கு வருவதாகவும், இங்கேயும் காசு கேட்டால் அதற்கு நாங்கள் தியேட்டரிலேயே பார்த்துவிடுவோம் என்று கூறியுள்ளனர்.
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’...
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...