தேர்தல், அரசியல் போன்ற விஷயத்தில் அஜித் தலையிட மாட்டார் என்றாலும், இதுபோன்ற செய்திகளில் அவ்வபோது அஜித் பெயர் இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது. இருந்தாலும், தற்போது வந்த தகவலின் படி அரசியல் விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அஜித் முடிவு செய்திருக்கிறாராம்.
ஆனால், இது தமிழக அரசியலோ அல்லது தேசிய அரசியலோ அல்ல, கோடம்பாக்க அரசியல். ஆம், அஜித்தின் அடுத்த படமான ‘விஸ்வாசம்’ படத்தின் கதைக்களம் அரசியல் தானாம். ‘வீரம்’ போல குடும்ப செண்டிமெண்ட் கதையை அரசியல் பின்னணியில் இயக்குநர் சிவா உருவாக்கியுள்ளாராம்.
முதலில், அரசியல் பின்னணி என்றதும் சிறிது தயக்கம் காட்டிய அஜித், பிறகு ஓகே சொன்னதோடு, அரசியல் சம்மந்தமான காட்சிகள் சிலவற்றுக்கு ஐடியாவும் கொடுத்திருக்கிறாராம். அதுமட்டும் அல்ல, படத்தில் அஜித் தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகளும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23...
அறிமுக இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மாயபிம்பம்’...
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது...