தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, அழகான ஆண் குழந்தையை பெற்று இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பவர், தற்போது டிவி நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள், திரைப்படங்கள் என்று மீன்உம் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், நடன இயக்குநர் கலா மாஸ்டரால் சினேகா வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.
சினேகாவின் அண்ணனை கலா மாஸ்டர் திருமணம் செய்துக்கொண்டதும், பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் அனைவரும் அறிந்தது தான். அறியாதது, இந்த விவாகாரத்தால், கலா மாஸ்டருக்கும், சினேகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். இதையடுத்து, சினேகாவுக்கு நடனம் ஆட தெரியாது, நடிக்க தெரியாது, என்று பலரிடம் கூறி வந்த கலா மாஸ்டர், அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் செய்துவிட்டாராம்.
இதனால், சினேகா இரண்டு ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி ரொம்பவும் கஷ்ட்டப்பட்டாராம். பிறகு, கமலுடன் சேர்ந்து நடித்ததால், தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...