22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்தப் படத்தில் வினய், தமன் ஹீரோக்களாகவும், ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வரிசையில் நேத்ரா படமும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஆக்ஷன், திரில்லர் கலந்த கதையில் கூடுதலாக காதலும் சேர்ந்து இயக்கியிருக்கிறார். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு பிடித்தமான திரைக்கதையில், தெரிந்த சம்பவங்களில் மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ். வித்தியாசமான நகைச்சுவைக்கு இந்த முறை இமான் அண்ணாச்சியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கை கோர்த்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பரா.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இசை வெளியீட்டு விழா வெளிநாடுகளில் நடந்திருக்கிறது. முதன் முறையாக ’நேத்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிச.2) கனடாவில் நடைபெறுகிறது.
யாஷூ எண்டர்டெயின்மெண்ட் (Yasho Entertainment) சார்பில், Dr...
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...