Latest News :

பாலக்காட்டில் எம்.ஜி.ஆர் நினைவகம் - எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குநர் கோரிக்கை
Saturday December-02 2017

காமராஜ் திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு எம்.ஜி.ஆர் என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

 

படப்பிடிப்பிற்கான அரங்கம் அமைப்பதற்காக பாலக்காடு அருகே உள்ள வடவனூரில் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டை படப்பிடிப்புக் குழுவினர் பார்வையிட்டனர். தற்போது அந்த வீடு அங்கன்வாடியாகச் செயல்படுகிறது. படப்பிடிப்புக் குழுவினர் அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்து இனிப்புகள் வழங்கினர்.

 

பின்பு  பாலக்காடு அருகிலுள்ள குழல்மந்தம் எனும் ஊரில் உள்ள எம்.ஜி.ஆரின் மனைவியார் சதானந்தவதி ம்மையாரின் பூர்வீக வீட்டையும் அதன் அருகே தனது மனைவிக்காக எம்.ஜி.ஆர் கட்டியுள்ள வீட்டையும் பார்வையிட்டனர். அந்த வீட்டில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அனேக பொருட்களை இன்றுவரை அவரது உறவினர்கள் பத்திரமாகப் பாதுகாத்து வருகின்றனர்.

 

அப்பகுதி மக்கள் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த பக்தியும் பாசமும் உள்ளவர்களாக உள்ளனர். பாலக்காடு மாவட்டத்தை தமிழ்நாட்டோடு இணைக்க எம்.ஜி.ஆர் விரும்பியதாக குறிப்பிட்ட அப்பகுதி மக்கள் குழல்மந்தம் பகுதியில் நிறுவுவதற்காக எம்.ஜி.ஆரின் வெண்கலச்சிலை ஒன்றை தங்கள் முயற்சியால் உருவாக்கியுள்ளனர். சிலை நிறுவ கோயம்புத்தூர் திருவனந்தபுரம் நெடுஞ்சாலை அருகே இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

தற்போது கூட எம்.ஜி.ஆர் மீது அன்பு கொண்டோரும் வரலாற்று ஆய்வாளர்களும் எம்.ஜி.ஆரின் பூர்வீக வீட்டையும்  அவரது மனைவியார் வீட்டையும்  எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்களையும் எம்.ஜி.ஆர் சதானந்தவதி அம்மையாருக்குத் திருமணம் நடந்த சிவன்கோவிலையும் தினந்தோறும் வந்து பார்த்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

 

அவ்வாறு வருபவர்களுக்காக பாலக்காடு மாவட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு ஒரு நினைவகம் ஏற்படுத்த வேண்டுமென அவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அவ்வாறு அமையவிருக்கும் நினைவகத்திற்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் தரத்தயாராக இருப்பதாக சதானந்தவதி அம்மையாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

 

தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு அவரது பூர்வீக இடத்தில் நினைவகம் அமைத்திட வேண்டுமென  தமிழக அரசிற்கு  ‘காமராஜர்”  ‘எம்.ஜி.ஆர்” திரைப்படங்களின் இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

1400

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் விமலின் ‘சார்’!
Wednesday December-11 2024

சிறந்த நடிகராக அறியப்பட்ட போஸ் வெங்கட் 'கன்னி மாடம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டார்...

கோலிவுட் கலைஞர்கள் கொண்டாடும் மலேசியாவின் ‘காரசாரம்’!
Wednesday December-11 2024

தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டு மொத்த கலைஞர்களையும் கொண்டாடுவதில் முதல் இடத்தில் இருப்பவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் தான்...

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியானது!
Tuesday December-10 2024

’சித்தா’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்...

Recent Gallery