ஒரு காலகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இன்றைக்கும் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜீத்துக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர்.
அதன் பிறகு இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தில் செட்டிலானார். திருமணத்திற்குப் பின் டிவி சீரியல்களில் பல ஆண்டுகள் நடித்த தேவயானி சினிமாவில் அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வந்தார்.
கணவர் ராஜகுமாரனின் இயக்கத்தில் வெளியான திருமதி தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்த தேவயானி நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். அவர் மீண்டும் ஹீரோயினானதற்கு காமெடி நடிகர் விவேக் தான் காரணம்.
நான் தான் பாலா படத்திற்கு பிறகு மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் விவேக், இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க தேவயானியை ரெக்கமண்ட் செய்தாரம். அதன்பேரிலேயே இப்படத்தில் தேவயானி ஹீரோயினாக்கப்பட்டாராம்.
‘எழுமின்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைக்க, வினோத் குமார் ஒளிப்பதிவையும், கார்த்திக் ராம் படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.
இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. படபூஜை தினத்தன்றே பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அப்பாஸ் ஏ...
பிரபலமான நாவல்கள் திரைப்படங்களாக உருப்பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது...
‘கே.ஜி.எப்’ புகழ் ஹோம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி வரும் மற்றொரு பிரமாண்ட திரைப்படம் ‘சலார்’...