யானையை மையமாக வைத்து ‘கும்கி’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன், ‘கும்கி 2’ படத்தை இயக்கி வருகிறார். இதில் மதிவாணன், அதிதி மேனன் என்ற புதுமுகங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கும் படமும் யானையை மையமாக கொண்டது தானாம். ராஜேஷ் கண்ணா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஹத்தி மேரே சாத்தி’ (Haathi Mere Saathi) என்ற இந்தி படத்தை தான் ரீமேக் செய்ய போகிறாராம்.
இதில் முக்கியமான வேடத்தில், பாகுபலி வில்லன் ராணா நடிக்க உள்ளார். யானைக்கும், மனிதனுக்கும் உள்ள பந்தத்தை செண்டிமெண்டாக சொல்லும் இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நடப்பதோடு, இதுவரை இந்திய திரைப்படங்களில் இடம்பெறாத இயற்கை வளம் பொருந்திய இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...