தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி, ஹீரோவாக அரை டசன் படங்களில் நடித்து வந்தாலும், பல படங்களில் கெளரவ வேடங்களிலும் நடித்து வந்தார். ஆனால், தொடர்ந்து அவர் பல படங்களில் சிறப்பு தோற்றங்களில் தோன்றுவது எடுபடாமால் போனதால் இனு கெளரவ வேடங்களில் நடிக்க போவதில்லை என்ற முடுவுக்கு வந்துவிட்டார்.
நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து பேசிய விஜய் சேதுபதி, நட்புக்காகதான் கெளரவ வேடங்களில் நடித்து வந்தேன். ஆனால், இனி யார் கேட்டாலும், எதற்காகவும் சிறப்பு தோற்றங்களில் நடிக்க மாட்டேன், என்று கூறினார்.
இந்த நிலையில், தனது முடிவை நயந்தாராவுக்காக விஜய் சேதுபதி மாற்றிக் கொண்டுள்ளார். நயந்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அவருக்கு ஜோடியாக கெளர வேடம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளார்.
ஏற்கனவே, ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயந்தாராவுடன் ஜோடி சேர்ந்த விஜய் சேதுபதி இரண்டாம் முறையாக இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...