சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைப் பெற்றது. அனிருத் இசையமைப்பில், 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக நயந்தாரா நடித்துள்ளார்.
அனிருத்தின் லைவ் இசை நிகழ்ச்சியோடு நடைப்பெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “தனி ஒருவன் படத்தை பார்த்ததும் டைரக்டரிடம் போனில் பேசினேன். இதுபோல் மிகவும் வலுவான கதை செய்யவேண்டும் என விரும்புவதாக கூறினேன். எனவே, மோகன் ராஜாவை நேரில் போய் பார்த்தேன். அவரும் என்னுடன் படம் செய்வதற்கு ஒப்புதல் தந்தார்.
இருவரும் சேர்ந்து அப்போதே வேலைக்காரன் என தலைப்பையும் தேர்வு செய்தோம். இந்த படத்தில் முழுக்க முழுக்க என்ன கிடைத்தாலும் இந்த பெருமை மோகன் ராஜாவையே சேரும்.
மேலும், மலையாள நடிகர் பகத் பாசில் ஒரு சிறந்த நடிகர். அவருடன் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
நயன்தாராவுடன் முதல் முறையாக நடித்துள்ளேன். ஏகன் படத்தில் தான் முதலில் அவரை பார்த்தேன். நேரம் தவறாமையை கடைப்பிடிப்பது தான் அவரது வெற்றிக்கான காரணம்.
அனிருத் இல்லையென்றால் சிவகார்த்திகேயன் இல்லை என டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்து வருகிறேன். அந்த கருத்தில் எனக்கு பெருமை தான். எனது வாழ்க்கையில் பாதிக்கு மேல் உங்களுக்கு கொடுத்துள்ளேன், உங்களுக்கு இது 15-வது படம். ஆனால், இது எனக்கு 11வ-து படம். இந்த படத்துக்கு உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
இனி விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன். ஏனெனில் நான் நடிக்கும் விளம்பரங்கள் மூலம் சிறு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு.
என்னை நல்ல மனிதனாக மாற்றிய படம் இது. அடித்தட்டு மக்களின் கேள்விகள், ஆசைகள் நடக்குமா என்பதை விளக்குவதே இந்த படம். இந்த படத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
இந்த படத்தில் வரும் பாடலின் வரிகளில், ஒரு முறையே வாழும் வாழ்க்கை, அதை பயனுறதாக்கு என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.” என்று தெரிவித்தார்.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது...