நடிகர் விஜயிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த நாகராஜ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பேரண் என்று கூறிக்கொண்டு வலம் வந்த நாகராஜ், என்பவர் தான் ஒரு சினிமா பைனான்சியர் என்று கூறி திரையுலகினருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
இதற்கிடையே விஜயின் ‘தலைவா’ படத்திற்கு பிரச்சினை வந்த போது, ஆளுநர் ரோசய்யாவின் மூலம் படத்தை ரிலிஸ் செய்து தருவதாக கூறிய நாகராஜ், விஜயிடம் இருந்து ரூ.50 லட்சத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஆனால், விஜய் இது குறித்து வெளியே சொல்லவில்லையாம்.
இந்த நிலையில், வேறு ஒரு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நாகராஜியிடம் நடத்திய விசாரணையில், அவர் விஜயிடம் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...