ஆபாச பட நடிகையாக உலகம் முழுவதும் பிரபலமடைந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ள சன்னி லியோன், முதல் முறையாக தமிழ்ப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை ஆகிய படங்களை இயக்கியவர் விசி வடிவுடையான். தற்போது தெலுங்கில் வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில், நேரடியாக சன்னிலியோன் களமிறங்கவுள்ளார். தெலுங்கைத் தொடர்ந்து, இப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்படவுள்ளது.
இது குறித்து சன்னிலியோன் கூறுகையில், ”கடந்த ஒரு வருடமாக நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் இயக்குனர் வடிவுடையானின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதனால், அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு தென்னிந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்கு பெரும்பாலும், ஆக்ஷன் படத்தில் நடிப்பது தான் பிடிக்கும். இப்படமும் வரலாற்று கதையம்சம் கொண்ட ஒரு ஆக்ஷன் படம் என்பதால் உடனே நான் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன்.” என்றார்.
இப்படத்திற்காக தன்னை பிரத்யேகமாக தயார்ப்படுத்தொள்ள இருக்கும் சன்னி லியோன், குதிரையேற்றம், வாள் சண்டை போன்ற பயிற்சிகளிலும் ஈடுபட உள்ளார்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...