சினிமாவில் சாதிக்க நினைப்பவர்கள், தற்போது சாதித்துக் கொண்டிருப்பவர்கள் பலருக்கு குறும்படம் ஒரு விசிட்டிங் கார்டாக அமைந்துள்ளது. குறும்படங்களின் அசூர வளர்ச்சியின் காரணமாக முன்னணி நடிகர், நடிகைகள் கூட குறும்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள விஜித், ஒரு குறும்படத்தை தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.
காதல் மற்றும் ஆக்ஷன் குறும்படமாக உருவாகியுள்ள இந்த குறும்படத்திற்கு ‘ஹப்பி நியூ இயர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் மிஸ் தென்னிந்தியா அக்ஷரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இக்குறும்படம் குறித்து பேசிய விஜித், “ஒரே காலனியில் வாழ்ந்து, ஒரு ஆபீஸில் வேலை செய்துதுகொண்டு, ஒருவர் மீது மற்றொவருக்கு ஈர்ப்பு இருந்தும் வெளிப்படையாக சொல்லிக்கொள்ள பயப்படும் ஒரு இளஞ்ஜோடியை பற்றிய கதை தான் 'ஹாப்பி நியூ இயர்'. ஒரு டிசம்பர் மதம் 31 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிக்கு முடியும் கதை இது. இந்த இடர்பட்ட 12 மணி நேரத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பது தன் இந்த குறும்படம். இந்த குறும்படத்தில் காதல்,ஆக்ஷன், திடீர் திருப்பங்கள் ஆகியவை சரியான கலவையில் இருக்கும்.” என்றார்.
'பைரவா' பட புகழ் தவசி ராஜா இப்படத்திற்கு சண்டை காட்சிகள் அமைத்துள்ளார். மஸ்தான் காதர் இசையில், ராஜேஷ் நாராயணன் ஒளிப்பதிவில், வித்து ஜீவின் படத்தொகுப்பில் 'ஹாப்பி நியூ இயர்' உருவாகியுள்ளது.
அழகான காதல் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளோடு, திருப்புமுனைக் கொண்ட கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை வெகுவாக கவரும் விதத்தில் அமைந்துள்ளதாக கூறும் விஜித், 'ஹாப்பி நியூ இயர்' குறும்படத்தின் தொடர்ச்சி பாகங்களாக 'ஹாப்பி வாலெண்டைன்ஸ் டே' மற்றும் 'ஹாப்பி தீபாவளி' போன்ற குறும்படங்களை இதே குழுவினருடன் எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...