‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாகவும், தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், விஜய் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அகிரா, ஸ்பைடர் என்று தொடர்ந்து இரண்டு தோல்விப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். விஜய்க்காக அவர் உருவாக்கியிள்ள கதை அவ்வளவு பிரமாதமாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தாலும், திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் படத்தை தோக்கி நிறுத்தி விடலாம், என்ற நம்பிக்கையில் இருந்த முருகதாஸ் திடீரென்று விஜய் படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தானாம். ‘2.0’ படத்தை முடித்துவிட்ட அக்ஷய் குமார், ’மில்லியன் டாலர் பேபி’ என்ற ஹாலிவுட் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளாராம். இப்படத்தை இயக்கும்படி அவர் முருகதாஸிடம் க்,ஏட்டுக் கொண்டதோடு, அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டாராம்.
லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை இயக்குவதற்காக முருகதாஸ் விஜய் படத்தை கைவிட முடிவு செய்துவிட்டாராம். இதனால், விஜய் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...