தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 250 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை அம்பிகாவின் கனவு 30 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியுள்ளது. அவரது கனவை நிறைவேற்றியிருப்பவர் ‘டிராபிக் ராமசாமி’.
இது குறித்து நடிகை அம்பிகா கூறுகையில், “நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பல்வேறுப்பட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது. ‘டிராபிக்ராமசாமி' என்கிற படத்தின் மூலம் அந்தக்கனவு நிறைவேறி இருக்கிறது.
'நான் சிகப்பு மனிதன்' என்ற படத்தில் ஒரு வக்கீல் வேடத்தில் நடித்தேன். அதை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். சுமார் 30 ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் 'டிராபிக் ராமசாமி' என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன். அது கதையோடு கலந்த நகைச்சுவை பாத்திரம். எனக்கு இது மிகவும் புதுமையான பாத்திரமாக மாறுபட்ட நடிப்பு அனுபவமாக இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி வந்துள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...